சத்திய வேதம் (ரேனியஸ்-1840)
தேவரீரோவென்றால், எங்கள்மேல் வந்ததெல்லாவற்றிலும் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோவெனில் ஆகாமியம்பண்ணினோம்.
பரிசுத்த வேதாகமம் (பவர்-1867)
கர்த்தாவே! எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லா வற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம்பண்ணினோம்.
திருவிவிலியம்; (பொது-1995)
கடவுளே! எமக்கு நேரிட்டவைகள் அனைத்திலும் நீர் நீதி உள்ளவர். ஏனெனில் நீர் உமது சொல்லுறுதியைக் காட்டியுள்ளீர். நாங்களோ தீயவை செய்துள்ளோம்.
பரிசுத்த பைபிள் (இ.ஆர்.வி-1998)
தேவனே, எங்களுக்கு ஏற்பட்ட எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர். நீர் உண்மையும் நேர்மையுமாயானவர். நாங்கள் தவறானவர்கள்.